யாழில் சோகம்! – கூலித் தொழிலாளி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சுண்ணாகம், அம்பனைப் பகுதியில் வீடு திருத்த வேலையில் ஈடுபட்ட கட்டட கூலித்தொழிலாளி ஒருவர் கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்தியிலான முகப்பு கூரை உடைந்து விழுந்ததில் அதில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் நவாலி, கலையரசி லேனை சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

error

Enjoy this blog? Please spread the word :)