மருதனார்மடம் கொத்தணி: கொரோனா தொற்று மாணவி கடந்த வாரம் பாடசாலை சென்றுள்ளார்!!
மருதனார்மடம் கொத்தணியில் கொரோனாத் தொற்றுறுதியான மாணவி கடந்த வாரம் பாடசாலைக்கு சென்று திரும்பியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட உடுவில் கல்விக் கோட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மருதனார்மடம் கோரோனா தொற்று கொத்தணியின் முதலாவது நபரின் மகளுக்கு நேற்று தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த வாரம் பாடசாலைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.

