நேற்று யாழில் 36 பேருக்கு தொற்றுறுதி; கொரோனா ஒழிப்பு தேசிய செயலணி ஆதாரப்படுத்தியது!

யாழ்ப்பாணத்தில் 24 மணி நேரத்தில் 36 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் தேசிய கொரோனா ஒழிப்புச் செயலணியின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்டுள்ள கடந்த 24 மணி நேரத்திற்கான புள்ளிவிபரத்தில் குறித்தவிபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 760 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் கொழும்பில் 397 பேருக்கு அதிகமானவர்கள் உள்ளடங்கலான விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றில் யாழ்ப்பாணத்தில் 36 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)