புதினங்களின் சங்கமம்

முகத்தை மறைக்காத பெண்கள் விபச்சாரிகளாம்!! சக்தி ரீவி நிகழ்ச்சியாளர் கூறியதால் வேலையை விட்டு துரத்தப்பட்டார்!!

உடலை முழுமையாக மூடாத பெண்கள் விபச்சாரிகள்.
– சக்தி தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளர்
தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் இந்தச் செய்தி வாசிப்பாளர் Twitter இல் இட்ட பதிவைக் கொஞ்சநேரத்தில் அழித்துவிட்டார்.
இந்த அடிப்படைவாதியின் கூற்றுப்படி, பர்தா/புர்க்கா அணியாத இஸ்லாமியப் பெண்களும் விபச்சாரிகள் என்றாகிறது.
இவர் வேலை செய்த இடங்களில், கூட வேலை செய்த தமிழ், சிங்களப் பெண்களையும் அப்படித்தானே நினைத்திருப்பார்.
இவருக்குச் சம்பளம் கொடுத்த முதலாளிகளின் குடும்பப் பெண்களையும் அப்படித்தானே நினைத்திருப்பார்.
வேலை செய்த ஊடகத்தின் நேயர்களையும் அப்படித்தானே நினைத்திருப்பார்.
சிறுமியரோடும் பெண்களோடும் நின்று படம் எடுக்கும்போதும் அப்படித்தானே நினைத்திருப்பார்.
வெளியே எங்கு போனாலும் கண்ணில் படுகின்ற பர்தா/புர்க்கா அணியாத எல்லாச் சிறுமியரையும் பெண்களையும் அப்படித்தானே நினைத்திருப்பார்.
இந்த நினைப்புள்ளவர்கள் மக்கள் மத்தியில் இருப்பது மிக ஆபத்தானது.
கெட்ட கேட்டுக்கு,
Best TV Presenter of the Year – 2019 விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவராம்.
அதைவிடக் கொடுமை, Human Rights Organization of Sri Lanka என்ற மனிதவுரிமை அமைப்பொன்றின் ஊடகச் செயலாளராம்.
சக்தி தொலைக்காட்சி இவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இவரை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது.
ஆனால், பெண்ணியம் பேசுவோர், ஒட்டுமொத்தப் பெண்களும் இழிவுபடுத்தப்படும்போதும் அமைதி காப்பதுதான் கவலையாக இருக்கிறது.
நன்றி
கந்தசாமி கங்காதரன்