Home புதினங்களின் சங்கமம் தனது நண்பனை அடித்துக் கொலை செய்த நபர்!! மட்டக்களப்பில் சம்பவம்!!

தனது நண்பனை அடித்துக் கொலை செய்த நபர்!! மட்டக்களப்பில் சம்பவம்!!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் சடலமாக இன்று (19) மீட்கப்பட்டடுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில்

மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணபிள்ளை நேசராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரும் அவருடைய நண்பனும் சம்பவதினமான நேற்று (18) இரவு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மதுபானத்துடன் சென்று மது அருந்தியுள்ளனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும். யானை பயத்தினால் அங்கிருந்து இன்று காலையில் வெளியேறி நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்து அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்த்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவினர் மற்றும் மேப்ப நாய் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணையினை பொலிசார் முன்னெடுத்துவருகின்றதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.