புதினங்களின் சங்கமம்

யாழில் காவாலிக்கூட்டத்தின் தலைவன் ‘டில்லு’ குடும்பமே சாவகச்சேரி விபத்தில் பலி!!

தென்மராட்சி நுணாவில் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சிக்கிய குடும்பத்தினர் மானிப்பாயைத் தளமாகக் கொண்டு செயற்படும் டில்லு என்ற குழுவின் தலைவரான டில்லு என்பவருடைய குடும்பத்தினர் என்று தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் டில்லு என்பவரின் மனைவி மற்றும் மகன் என்று தெரியவந்துள்ளது.


இதேவேளை இன்று மாலை காவாலிக் குழு ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றதாகவும் பின்னர் பொலிஸாரின் துணையுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை மேலதிகமாக காயமடைந்தவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு வைத்தியசாலை வட்டாரங்கள் தயக்கம் காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் யாழ் மடத்தடிப் பகுதியில் பெருமளவு காவாலிகள் கூடிநிற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.