யாழ் பல்கலைக்கழக ஊழியரின் வீட்டுக்குள் புகுந்து வாள் வெட்டுக்குழு கொடூர தாக்குதல்!!
யாழ்.பல்கலைகழக ஊழியரின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டூழியம்..!
திருநெல்வேலியில் சம்பவம்..
யாழ்.திருநெல்வேலி பகுதியில் நேற்றிரவு வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில்
இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன் வீட்டை அடித்து நொருக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி
சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, யாழ்.பல்கலைகழக ஊழியரான ரட்ணசிங்கம்
அகிலன் என்பவருடைய வீட்டுக்குள் நேற்றய தினம் இரவு 10 மணிக்கு நுழைந்த வாள்வெட்டு கும்பல்
வீட்டில் இருந்தவர்களை வாள் முனையில் அச்சுறுத்தியுள்ளதுடன் வீட்டை அடித்து நொருக்கி
சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிவு செய்திருக்கின்றார். இதனடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டிருக்கின்றார்.