புதினங்களின் சங்கமம்

புரவிப் புயலில் யாழில் காணாமற்போன கடற்றொழிலாளி சற்றுமுன் கடலில் சடலமாக மீட்பு!!

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (03) வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பொன்னாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமற்போன சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.