புதினங்களின் சங்கமம்

வடமராட்சி கிழக்குப் பகுதியை நெருங்கியது புரவி….!!

வடமராட்சி கிழக்குப் பகுதியை புரவி புயல் நெருங்கியுள்ளது. வடமராட்சி கிழக்கு முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் கடும் மழை மற்றும் காற்று வீசக் கூடும் எனவும் வானிலை அவதானி நிலையம் தெரிவித்துள்ளது. இதே வேளை புயல் எச்சரிக்கையையும் மீறி 800 இந்திய மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளார்கள் எனவும் அவர்களை விமானம் மற்றும் கடற்படை கப்பல்களின் துணையுடன் மீட்க இந்திய அரசு முயற்சி செய்கின்றது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை புரவி புயல் இலங்கையை நெருங்கி வருவதால் வடக்கு – கிழக்கு மாகாண மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவோ, திறந்த வெளிகளில் ஒன்றுகூடவோ வேண்டாம் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அறிவித்துள்ளார்.