புதினங்களின் சங்கமம்

வலுப்பெறும் சூறாவளி: கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு 3 நாள் விடுமுறை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் சூறாவளியாக மாறி வலுப்பெற்று வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை தொடரவதால் நாளை முதல் (டிச-02, 03, 04) வரும் வெள்ளிக்கிழமை வரை கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் சூறாவளியாக வலுவடைந்து மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை ஊடறுத்து நாளை (டிச-02) மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.