புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் தேன் எடுப்பதாக 78 வயது கிழவன் 11 வயதுச் சிறுமி மீது வல்லுறவு!!!!

மட்டக்களப்ப கரடியனாறு பிரதேசத்தில் 11 சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட கைது செய்யப்பட்ட 78 வயதுடைய சிறுமியின் பெரியப்பாவை,

எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 11 சிறுமியை சம்பவதினமான கடந்த 28ம் திகதி சிறுமியின் தாயாரின் சகோதரியின் கணவனான 78 வயதுடைய பெரியப்பா காட்டில் தேன் எடுத்து தருவதாக சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று,

பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டபோது அந்த பகுதியில் மாடு மேய்கச் சென்ற ஒருவர் இதனைக்கண்டு சிறுமியின் பொற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியின் பெற்றோர் 29 ம் திகதி பொலிஸ் நிலையத்தில்; முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த 78 வயதுடைய சிறுமியின் பெரியப்பாவை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் கைது செய்தவரை களுவாஞ்சிக்குடி சுற்றிலா நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில்,

நேற்று திங்கட்கிழமை (30) ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.