புதினங்களின் சங்கமம்

கொழும்பு மட்டக்குழியில் உள்நாட்டில் தயாரித்த குண்டுகளுடன் 3 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்!!

தென்னிலங்கையில் சற்றுமுன்னர் 21 கைக்குண்டுகளுடன் மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

இந்தச் சம்பவம் மட்டக்குழியில் இடம்பெற்றுள்ளதாவும் இவர்களிடமிருந்து 6 ஆபத்தான கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இந்த ஆயுதங்களும் சந்தேகிகளும் அகப்பட்டதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

கைதாகியவர்களிடம் தற்பொழுது தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.