இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவம்!! மனநலம் பாதிக்கப்பட்டவரைக் காதலித்து தொழில் அதிபர் ஆக்கிய பெண்!!
உண்மைச் சம்பவம், இலங்கையில் நிகழ்ந்தது!!
ஒரு பெண்ணால் ஆணின் வாழ்க்கையை தலைகீழாக மாற்ற முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் இந்த கதை!
இந்த புகைப்படம் 2019ல் எடுக்கப்பட்டது.
அந்தக் காலத்தில் கலேவெல நகரில் உள்ள tutions பக்கமாக நடந்து திரிந்து கொண்டிருந்தவர் தான் இந்த குமார் ஐயா (அண்ணா) என்கிற குமார். குமாரவினால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது . மிஞ்சி மிஞ்சி போனால் என் சுது நோனாவை ( காதலியை ) பார்த்தீர்களா என்று அருகில் நின்று கொண்டிருக்கும் இளைஞர்களிடம் கேட்பார். அதனால் அவரை பார்க்கும் அனைவருக்குமே பாவமாக தான் இருக்குமே தவிர
யாருக்கும் வெறுப்பாக இருக்காது.
குமார சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை அதிகமாக காதலித்ததால் வந்த விளைவு பைத்தியமாகி விட்டார். குடும்பத்தினரும் கை விட்ட நிலையில் அனைத்தைதும் மாற்றியது வேறொரு பெண்ணின் காதல்.
ஒரு நாள், தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்த சயூரி, இரவு 8.30 மணியளவில் கடைசிப் பேருந்தைத் தவறவிட்டு, பேருந்து இல்லாமல் கலாவெவ சாலையின் ஓரத்தில் காத்துக்கொண்டிருந்தாள் .
ஒரு இளம் பெண் தனியாக அதுவும் சாலை ஒரமாக நின்று கொண்டிருந்தால் சில இளைஞர்களுக்கு போதுமே, அடுத்த நொடியே சுற்றி வளைத்து விடுவார்கள் பாதுகாக்க அல்ல பார்த்து கேலி செய்ய.
சயூரியை சில இளைஞர்கள் கேலி செய்வதை பார்த்த
குமார இளைஞர்களை விரட்டி விட்டு சயூரியின் வீட்டார்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை பாதுகாப்புக்கு நின்றுக்கொண்டிருந்தான்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சயூரிக்கு குமார மீது பரிவு ஏற்பட சயூரி மற்றும் குமார தினமும் சாலையில் பார்த்து பேசிக் கொண்டார்கள்.
பரிவு பாசம், குமாரவை மாற்ற, பழக்கம் காதலாக மாறியது. காதலால் பைத்தியமான குமார காதலால் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்தார்.
பைத்தியமாக இருந்த குமார தற்போது இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராகவும், சயூரி அவரது அன்பு மனைவியாகவும் இருக்கிறார். .சயூரி அன்று குமாரவின் வாழ்க்கையில் வந்திருக்கவில்லை என்றால் அவர் இன்றும் அவரது காதலியை தேடிக்கொண்டு சாலை ஓரமாக திரிந்து கொண்டு இருந்திருப்பார்.
தற்செயலாக நம் வாழ்வில் வரும் சிலர், நம் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விடுகிறார்கள். இது போன்ற மாற்றங்கள் நல்லதாக இருந்தால் உலகம் அழகாக இருக்கும்
தமிழில் மொழியாக்கம் : கயல்விழி