புதினங்களின் சங்கமம்

யாழ் கோப்பாயில் பொலிசார் வெளியே எடுத்துக் காட்ட அதை குனிந்து பார்த்த கஜேந்திரர்!! (Video)

கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல சுற்றாடல் பகுதியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சுத்தம் செய்தனர். இதன்போது சம்பவ இடத்திற்கு கோப்பாய் பொலிசார் சென்று அதை தடுக்க முயன்ற போதும், முன்னணியினர் அதற்கு இடம்கொடுக்கவில்லை.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், துயிலுமில்லத்திற்கு எதிரில் விவசாய காணியில் கடந்த சில வருடங்களாக அஞ்சலி நிகழ்வு நடந்து வருவது வழக்கம்.

அந்த பகுதியில் சிரமதானம் மேற்கொள்ளும் பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டனர். முன்னணியின் இரண்டு எம்.பிக்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் இருவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த நிலையில் கோப்பாய் பொலிசார் அங்கு வந்து சிரமதான பணிக்கு தடைவிதிக்க முயன்றனர். இதனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கும், பொலிசாருக்குமிடையில் தர்க்கம் உருவானது. இதன்போது கஜேந்திரகுமார் எம்.பியை சிவில் உடையில் பொலிஸ்காரர் ஒருவர் காணொலி எடுக்க முனைந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரது ஆளடையாளத்தையும் பரிசோதித்தார்.

சிரமதானத்தில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரத்தை பொலிசார் பதிவு செய்ய முயன்றபோது, அதற்கும் முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது.

இறுதியில் பொலிசார் அங்கிருந்த விலகிச் சென்றனர்.