புதினங்களின் சங்கமம்

யாழில் படுக்கையில் உயிரிழந்த ஆவா குழு சசிதரன், அம்மம்மா உயிரிழந்தது ஏன்?? (Photos)

ஆவா குழுவில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் கஞ்சா, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் என்பதுடன் அவ்வாறு அடிமையானவர்கள் தங்களை சினிமா கதாநாயகர்களாக உருவகித்து தங்களுக்குள்ளேயே சில வில்லன்களை உருவாக்கி வன்முறைத் தாக்குதல்களை மேற்கொண்டு வந்ததுடன் போதைப்பொருட்களையும் கடத்தி வந்தார்கள். இவர்கள் முன்னைய காலத்தில் இராணுவத்தால் வழிநடாத்தப்பட்டார்கள் எனவும் தற்போதும் இராணுவமே அவர்களை வழிநடாத்துவதாகவும் மக்கள் மத்தியில் பரவலாக கருத்துக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் தற்போது இவர்களை இராணுவமே பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்து வருவதையும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் யாழ் உடுவில் ஆலடியில் நேற்று 30 வயதுடைய ஆவா குழுவைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் சகிதரன், அவரது அம்மம்மா மாணிக்கம் நாகேஸ்வரன் (வயது-70) ஆகிய உயிரிழந்துள்ளனர். பேரன் உயிரிழந்த துக்கம் தாங்காது பாட்டியும் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சசிதரன் நித்திரையில் பலியானதுக்கு அவர் பாவித்த போதைப்பொருளே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் தோன்றியுள்ளது. அல்லது தற்போது கொரோனா வைரஸ் இரத்தத்தை கட்டியாக்கி மாரடைப்பை உருவாக்குகின்றது என தகவல்கள் வெளியாகிய நிலையில் அவ்வாறான ஒரு நோயும் இவர்களுக்கு இருந்திருக்கலாம் என சந்தேகம் தோன்றியுள்ளது. ஆகவே இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாகியுள்ளன.