16 வயது சிறுமி கர்ப்பம்!! அண்ணணின் அலங்கோலம் வெளியானது!!
தமிழகத்தில் 16 வயது சிறுமி கர்ப்பமான நிலையில் அதற்கு காரணம் அவரின் அண்ணன் என்ற அதிர்ச்சி உண்மை வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (26). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சந்திரசேகரனின் தங்கை முறை உடையை 16 வயது பள்ளி மாணவி ஒருவர் உதவி செய்து வந்துள்ளார்.
காதலர்கள் சந்திப்புக்கு அந்த சிறுமியின் வீட்டை அடிக்கடி இருவரும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அடிக்கடி அந்த சிறுமி வீட்டுக்கு சென்று வந்த சந்திரசேகரன், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஓராண்டாக சிறுமியை சந்திரசேகரன் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 6 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது, அண்ணன் சந்திரசேகரன் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் மகளிர் பொலிசார் சந்திரசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

