Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழில் விதானையாருடன் பாலியல் உறவில் ஈடுபட மறுக்கும் மனைவி!! கொரோன அவலம்!! மாமியால் வந்த வினை!!

யாழ் வலிகாமம் பகுதியில் கொரோனா நோயின் அச்சத்தால் விதானை ஒருவருக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறித்த விதானையின் மாமியார் (மனைவியின் தாய்) நீரழிவு மற்றும் தொற்றாநோய்களுக்கு உள்ளானவர் எனவும் இதனால் விதானை தனது வேலை நிமிர்த்தம் வெளியே சென்று வீடுதிரும்பினால் விதானையை வீட்டின் உள்ளே மனைவி நுழைய விடுவதில்லை எனவும் தெரியவருகின்றது.

சீதனமாக கொடுத்த மனைவியின் வீட்டில் வசித்துவரும் விதானையாருடன் மனைவியின் தாய் மற்றும் தந்தையாரும் வசித்துவருகின்றார்கள். இவர்களில் மனைவியின் தாயார் தொற்றாநோய்களுக்கு உள்ளானவர் எனத் தெரியவருகின்றது. இந் நிலையில் மாமியார் அண்மையில் அந்த நோய்களுக்காக “கிளினிக்” சென்ற போது வெளியிடங்களில் இருந்து வருபவர்களையும் பலருடன் நெருங்கி வேலை செய்பவர்களையும் வீ்ட்டில் தங்க வைக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே விதானையாருக்கு அலங்கோலம் நடந்துள்ளது.

விதானையாருக்கு வீ்ட்டிற்கு வெளியே வளவில் உள்ள பழைய கட்டடம் ஒன்றை கொடுத்து இரவு, பகலில் அங்கேயே தங்குமாறும் தனது தாய்க்கு கொரோனா வந்தால் தாங்கமாட்டார் எனவும் மனைவி கூறியுள்ளார். இதனால் விதானையார் முரன்பட்டுள்ளார். இருப்பினும் மனைவியின் கடும் அழுத்தம் மற்றும் சண்டை காரணமாக விதானையார் அந்த அறையிலேயே சில நாட்கள் தங்கியிருந்துள்ளார். மனைவி மட்டுமல்லாது பிள்ளைகளும் துார நின்று தன்னுடன் கதைத்து பேசுவதால் வெறுப்பான விதானையார் தனது மாமி மற்றும் மாமனாரை மனைவியின் தம்பியுடன் சென்று தங்குமாறு கூறி சண்டை பிடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட சச்சரவுகள் தற்போது பொலிசார் வரை சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

விதானையாருக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் தனது மனைவியுடன் ஒரு மாதத்துக்கு மேலாகஅன்பாக ஒரு இரவாவது தங்கவில்லை என்பதே என விதானையாரின் வீட்டுக்கு அயலில் உள்ள இளைஞர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.