யாழ் உடுவிலில் 9 வயதுச் சிறுமிக்கும் கொரோனா!!
யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளவர் 09 வயதுடைய சிறுமி என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.
கொழும்பு, கொச்சிக்கடையிலிருந்து தாயும் மூன்று பிள்ளைகளும் யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்துக்கு வந்திருந்த நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களில் இன்று 09 வயதுடைய மகளுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் பின்னர் வெளிவரும் என்று தெரிவித்த பணிப்பாளர்,
ஏற்கனவே மருதனார்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தாயும் மகளுக்கும் இந்தப் பிள்ளைக்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

