யாழில் மூன்று பிள்ளைகளின் தாய் மீது வாள்வெட்டு! இரவு வீடு புகுந்து வன்முறை!
யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலைப் பகுதியில் இன்று இரவு அடையாளம் தெரியாத குழு ஒன்று வீடு ஒன்றினுள் புகுந்து பெண் ஒருவரை வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு சப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று இரவு 9.30மணியளவில் மீசாலை பவா கடையடி என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற குழு வீட்டினுள் புகுந்து குறித்த பெண் மீது சரமாரியாக வாளினால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மூன்று பிள்ளைகளுடன் குறித்த பெண் தனித்துவாழ்பவர் என்று தெரியவருகின்றது.
படுகாயம் அடைந்த குறித்த பெண் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

