தொற்று நோயாளிகளுடன் தொடர்புடையோர் இனி வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்படும் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் இன்று முதல் அவா்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இனிமேல் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் தற்போதைய தனிமைப்படுத்தல் முறைமை அமுல் செய்யப்படுவதாகவும் இராணுவத் தளபதி இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். தொற்று நோய் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு இது குறித்து மீளாய்வு செய்யப்படும் எனவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

