இலங்கை தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக ISIS அமைப்பு வெளியிட்ட Video
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான காணொளி வெளியாகி உள்ளது.
இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் Abu Bakr al-Baghdadiயிடம் வாக்குறுதியளித்துள்ளனர்.
இந்தக் காணொளியை ஐ.ஸ் அமைப்பின் அமாக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கை தற்கொலை தாக்குதல் செய்வதாக வாக்குறுதி வழங்கும் 59 வினாடி காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 310 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தற்கொலை தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பு ஏற்பதாக இன்று அமாக் அமைப்பு
அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#BREAKING: #ISIS 'Amaq News Agency releases a 59-second video showing #SriLanka attackers pledging to #ISIS leader Abu Bakr al-Baghdadi pic.twitter.com/FfOv9gpbYS
— Amichai Stein (@AmichaiStein1) April 23, 2019