ஜோதிடம்

இன்றைய இராசிபலன் (24.04.2019)

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் ஏற்படும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். ஆதாயம் பெறும் நாள்.

கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஏற்றம் உண்டாகும் நாள்.

கன்னி: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நட்பு வட்டம் விரியும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனஉளைச்சல் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மகரம்: உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். தாழ்வுமனப் பான்மை வந்துப் போகும். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி
முன்னேறும் நாள்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்கள் பாசமழைப் பொழிவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மீனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.