இலங்கையில் உருவாகிய புதிய பணக்கார முஸ்லீம் வர்த்தகர்கள்!! அதிர்ச்சியில் புலனாய்வுதுறை
இலங்கையில் புதிதாக உருவாகிய முஸ்லிம் வர்த்தகர்கள் தொடர்பில் புலனாய்வு துறை தகவல்களை திராட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.
திடீரென உருவான வர்த்தகர்கள், அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த பணம், அவர்கள்
இயக்கிய வர்த்தக நிறுவனங்கள் உட்பட்ட பல விடயங்களை புலனாய்வுத் துறை திரட்டி வருவதாக
கூறப்படுகிறது.
இவற்றை தவிர அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுடன் பணக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்கள் குறித்தும் தனி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொடையில் கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகரின் இரு மகன்மார் தற்கொலை தாக்குதலில் இறந்துள்ள சம்பவம் குறித்து புலனாய்வு விசாரணைகளை நடத்திய பொலிஸ் இந்த வர்த்தகர் மற்றும் அவரின் சம்பந்தியான பிரபல நகைக்கடை வர்த்தகர் ஆகியோர் அரசின் உயர்மட்ட அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்ததாக அறிந்துள்ளதாக தகவல்.
இது குறித்து விசேட அறிக்கை ஒன்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக புத்தளம் வண்ணாத்தி வில்லு பகுதியில் ஆயுதப் பயிற்சியை எடுத்ததாக கைது
செய்யப்பட்ட ஒருவரை விடுதலை செய்ய மாகாண ஆளுநர் அசாத் சாலி அழுத்தங்களை வழங்கினார். சொல்லப்படுவது குறித்தும் விசாரிக்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன .