மகிந்த அரசாங்கத்தால் துரத்தப்பட்டார் மட்டு அரசஅதிபர்!! சிங்கள குடியேற்றத்தை எதிர்த்ததே காரணமாம்!!
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் காணப்படுகின்ற மாடுகளின் மேச்சல் நிலப் பகுதியை காடழித்து மகாவலி அதிகார சபை சோழச் செய்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முயற்சியின் பெயரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்களக் குடியேற்ற விவகாரத்தின் பின்னணியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பதவியில் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவரும், தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே.கருணாகரன் நியமனம் பெற்றுள்ளார்.
இன்று பிற்பகல் இதற்கான அமைச்சரவை நியமன கடிதத்தினை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
அரச அதிபராக கடமையாற்றிய திருமதி. கலாமதி பத்மராஜா, பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சிற்கு உடனடியாக அமுலாகும் வரையில் இடமாற்றம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் காணப்படுகின்ற மாடுகளின் மேச்சல் நிலப் பகுதியை காடழித்து மகாவலி அதிகார சபை சோழச் செய்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள் என்று பகிரங்கமாக ஊடகங்கள் முன்னிலையில் குற்றம்சாட்டிய மட்டக்களப்பு மாவட்டச் செயலர் கலாமதி பத்மராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த பதவி மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

