புதினங்களின் சங்கமம்

சுமந்திரனி அடிவருடி அரசஊழியர் மீது கொலை வெறித்தாக்குதல்!!

தேர்தல் கடமையிலிருந்து வீடு திரும்பிய அரச பணியாளர் ஒருவரை தமிழரசுக்கட்சி சார்பு பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரொருவர் தாக்கியதாக பளை காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உதவியாளரான சிவானந்தம் பிரசாத் என்பவரே தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது.

பாடசாலை பணியாரான புஸ்பராசா என்பவரே தாக்குதலிற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சார காலத்தில் சஜித் அதரவு சுவரொட்டிகளை தனது சகபாடிகள் சகிதம் சிவானந்தம் பிரசாத் புஸ்பராசாவின் வீட்டு மதிலில் ஒட்டியுள்ளார்.தான் அரச பணியாளர் எனவும் பக்க சார்பாக நடக்கமுடியாதென தெரிவித்து அதனை புஸ்பராசா அகற்றியுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் இரவோடிரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இதனையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலையிலேயே தேர்தல் கடமையிலிருந்து திரும்பியிருந்த புஸ்பராசா மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது.

கெல்மட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட புஸ்பராசா வைத்தியாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Image may contain: 1 person, ocean, outdoor and waterNo photo description available.