புதினங்களின் சங்கமம்

ரிஷாட் பதியுதீன் எந்தவேளையும் கைதாகலாம்!! பிடியாணை இல்லாது கைது செய்ய முடியும்!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பிடியாணை இல்லாமல் பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல த லிவேரா பொரிஸாரிற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இருப்பினும் பிடியாணை இல்லாமல் ரிஷாட் பதியுதீனை பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.