யாழில் மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிமருந்து பொருட்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின் பகுதியில் உள்ள குளத்திற்கு அண்மையில் இருந்து ஆர்.டி.எக்ஸ் மற்றும் ரி.என்.ரி மருந்து கலக்கப்பட்ட 4 கிலோ 3 கிராம் வெடி மருந்து பொதி மற்றும் 10 ரெனரேட்டர்கள் என்பன படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பானத்தில் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறம் உள்ள குளத்தின் அருகில் இந்த வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.


