வங்கி ஊழியர் உட்பட்ட 39 பேருக்கு கொரோனாத் தொற்று! மொத்த எண்ணிக்கை 4791 ஆக அதிகரிப்பு!
NDB வங்கியின் மெரைன் றைவ் கிளையில் பணியாற்றும் மினுவாங்கொட பகுதியைச் சேரந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
39 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இன்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றுநோயாளர் தொகை 4,791 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட 39 தொற்று நோயாளிகளில் 25 போ் தனிமைப்படுத்தல் மையங்களைச் சேர்ந்தவர்களாவர். 14 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொத்தணித் தொற்றுடன் தொடர்புடையவா்கள்.
இதேவேளை, இன்று உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்று நோயாளர்களுடன் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய தொற்று நோயாளர் தொகை 1,346 ஆக அதிகரித்துள்ளது.

