கொழும்பில் கொரோனா தொற்று சந்தேகநபர் தப்பியோடியதால் பரபரப்பு!!
கொரோனா தொற்று சந்தேகத்தில் ராகமாவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவா் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய நபரைத் தேடிக் கண்டறியும் முயற்சியில் பேலியகொட பொலிஸ் நிலையத்தைச் சோ்ந்த பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்று சந்தேகநபர் போதைக்கு அடிமையானவர் என்றும், போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள அவா் தப்பியோடியிருக்கலாம் எனவும் கருதப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான நோயாளி கிராண்ட்பாஸ் பகுதிக்கு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் அந்த நபர் இதுவரை பேலியகொட பகுதியில் உள்ள எந்தவொரு வீட்டுக்கும் வரவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

