Home புதினங்களின் சங்கமம் யாழ் மாநகரசபை ஊழியர்களுக்கிடையிலும் கொரோனா அச்சம்!! வாய்பேசமுடியாத ஊழியர்களால் ஏற்பட்ட சிக்கல்!!

யாழ் மாநகரசபை ஊழியர்களுக்கிடையிலும் கொரோனா அச்சம்!! வாய்பேசமுடியாத ஊழியர்களால் ஏற்பட்ட சிக்கல்!!

யாழ் மாநகரசபையில் கடமையாற்றும் வாய்பேசமுடியாத ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுச் சந்தேகநபரான ஒருவருடன் சேர்ந்து கூட்டம் ஒன்றில் பங்குபற்றியதால் யாழ் மாநகரசபை ஊழியர்களுக்கிடையில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த கொரோனா தொற்று யுவதியுடன் இன்னொரு வாய்பேசாத நபரும் வந்ததாகவும் அவருடன் யாழ் மாநகரசபையில் கடமையாற்றும் வாய் பேசமுடியாத ஊழியர்கள் சேர்ந்து கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதாகவும் தெரியவருகின்றது. இச் சம்பவத்தால் யாழ் மாநகரசபை ஊழியர்களுக்கிடையில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது.