புதினங்களின் சங்கமம்

யாழில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய 2 முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடந்த கதி!!

யாழ் கஸ்தூரியர் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினார்கள் என இரண்டு பல்கலைகழக மாணவர்கள் நேற்று கைதாகினர். அவர்கள் இருவரும் மட்டக்களப்பை சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் தங்கியிருந்து, பல்கலைகழக மாணவர்கள் இருவர் நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடினார்கள் என்று பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, அவர்கள் கைதாகினர்.

எனினும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சாப்பாட்டு பார்சல் கட்டுவதற்காக கடைகளை தேடி திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் அறிவுறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.