Home புதினங்களின் சங்கமம் கனடாவில் வீடு புகுந்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட தமிழ் காவாலி! நடந்தது என்ன?

கனடாவில் வீடு புகுந்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட தமிழ் காவாலி! நடந்தது என்ன?

கனடாவின் ரொறன்ரோவில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான விசாரணையை அடுத்து, 28 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோவைச் சேர்ந்த 28 வயதான விகாஸ் நமசிவாயம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை ரொறன்ரோ பொலிஸாரின் இணையவழி சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவினர், பின்ச் அவென்யூ வெஸ்ட் மற்றும் சென்டினல் ரோட் பகுதியில் உள்ள வீடொன்றில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இணையத்திலிருந்து சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்களைப் பதிவிறக்கம் செய்தமை மற்றும் வீட்டிலிருந்த மின்சாதனங்களில் அதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்தமை, அப்பொருட்களை அணுகியமை மற்றும் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் செப்டம்பர் 30-ஆம் திகதி பிற்பகல், ரொரன் பிராந்திய பிணை மைய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments