புதினங்களின் சங்கமம்

முக்காடு போட்டுத்திரியும் முஸ்லீம் பெண்களின் பர்தாவை தடைசெய்ய யோசனை!! பர்தாவுடன் பிடிபட்டது யார்? (Video)

இஸ்லாமியப் பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் வகையில் அணியும் ஃபர்தாவைத் தடை செய்வது தொடர்பில், இஸ்லாமிய மத அமைப்புகள், எதிர்வரும் நாட்களில் அறிவிக்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக, சிறிகொத்தாவில் இன்று (23) இடம்பெற்ற ​ஊடகவியலாளர் மாநாட்டின் போது, முஜிபூர் எம்.பி கூறினார்.