புதினங்களின் சங்கமம்

பளைப் பகுதி காட்டுக்குள் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பளைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பளையிலிருந்து மாமுனை செல்லும் காட்டுப் பகுதியிலேயே குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.

உருக்குலைந்த நிலையில் சடலம் எலும்புக்கூடாகக் காணப்படுவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.