Vampan memesபுதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிசு! கொலைகார தாயின் பின்னணி..(Video)

குழந்தைகளை கண்டால் பார்ப்பவர்களுக்கே கொஞ்ச தோண்றும் ஆனால் ஒரு தாய்க்கு கொலை செய்ய தோண்றியுள்ளது என்றால் அந்த தாயின் இதயம் எத்தகைய கொடூரமானது..

மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயார் சந்தேகதத்தின் பேரில் இன்று வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 15ம் திகதி இரவு மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக 42 நாள் கொண்ட கோஷனி என்ற சிசு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது மூத்த பிள்ளைக்கு இரண்டரை வயது எனவும் அவர் தொடர்ந்து தாய்ப்பால் குடித்துவந்துள்ளதாகவும்,

அந்த நிலையில் இரண்டாவது பிள்ளை கருவுற்று பிறந்த பின் அவருக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போயுள்ளதனால் பிறந்த பிள்ளைக்கு தாய்ப்பால் வழங்கும்போது,
மூத்தபிள்ளை என்னை முறைத்து பார்ப்பதுடன் தந்தையிடம் அம்மா தன்னை கவனிப்பதில்லை என தெரிவித்து வந்துள்ளார் எனவும்.
மூத்த பிள்ளை என்னிடம் வருவது குறைவடைந்துள்ளது. இதனால் நான் குழப்பமடைந்திருந்தேன்.

இந்த நிலையில் கடந்த 15 திகதி சம்பவதினமான மாலை வீட்டில் எனது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கோவிலுக்கு சென்ற சமயம்,
நான் தனிமையில் இருந்தபோது கட்டிலில் படுத்திருந்த குழந்தையின் வாயில் துணியை திணித்து பின் வீட்டின் முன்பகுதியில் இருந்த கிணற்றில் வீசினேன்.

பின்னர் குழந்தை காணாமல் போயுள்ளதாக தெரிவித்தேன் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இருந்தும் இதன் பின்னர் விசாரணையில் உறவினர்களின் வாக்கு மூலம் கிடைக்க பெற்ற தகவலாவது. தான் பெற்ற 2 குழந்தைகளையும் சரிவர கவனிக்க முடியாத இந்த தாய் தன் பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கூட சரிவர கொடுத்து வளர்க்கவில்லை. தாயின் பராமரிப்பு குறைவாக இருந்த போதிலும் தந்தையின் உறவினரின் அரவணைப்பிலே இரு குழந்தைகளும் அநேக நேரம் வளர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கல்லடி இசைநடன கல்லூரியில் நியமனம் கிடைத்த இந்த வேளையில் தான் வேலைக்கு செல்வதற்கு குழந்தை ஒரு தடையாக இருப்பதாக கருதிய தாய். தனது வீட்டாரிடம் குழந்தையை காட்டி விட்டு வருவதாக கணவனிடம் சொல்லி எடுத்துச்சென்று தனது தாயின் வீட்டில் வைத்து குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்..

இப்படி கொடூர குணமிக்க ஒரு தாய்க்கு நீதிமன்றம் 4 வருட சிறை தண்டனை மாத்திரமே இன்று வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கு குழந்தை வேண்டாம் எனும் பட்சத்தில் அதை யாரிடமாவது கொடுத்து வளர்த்திருக்கலாம் ஆனால் கொலை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன.. எங்கே செல்கிறது எமது இனம்? எமது மனிதநேயம்.. 4 வருடத்தில் கொலைகார தாய்க்கு விடுதலை ஆனால் அந்த குழந்தை மீண்டு வருமா.??

இது ஒரு பேஸ்புக் பதிவு

Image may contain: 2 people, text that says "தாய் கொலைகார"No photo description available.