புதினங்களின் சங்கமம்

வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி இராணுவத்தினரால் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறையில் உள்ள ஆதிகோவிலடி பகுதி திடீரென இராணுவத்தினரால் சுற்றிவளைப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருகையில்,

இன்று பி.பகல் தொடங்கிய இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையானது சுமார் 2 மணித்தியாலங்கள் நீடித்துள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் வசிக்கும் ஒருவரை தேடியே குறித்த திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் குறித்த பகுதியில் உள்ள வீடுகளை சல்லடை போட்டு தேடிய போதிலும் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த நபர் சிக்கவில்லை. இதையடுத்து இராணுவத்தினர் அங்கிருந்து சற்று முன்னதாக வெளியேறிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.