தம்புள்ளையில் கோர விபத்து!! 25 பேருக்கு ஏற்பட்ட கதி!! (Photos)
சற்றுமுன் தென்னிலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து தம்புள்ளை திகம்பதக பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்தும் சிற்றுந்து ஒன்றும் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.
மேலும் குறித்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர், காயமடைந்தவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.