புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் ஒலிவாங்கியை எடுத்துவர மறுத்த மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்!

வவுனியாவிலுள்ள பிரபல்யமான தேசிய பாடசாலை ஒன்றில் இன்று காலைப் பிரார்த்தனையின்போது ஆசிரியர் ஒருவர் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் நடாத்தியதில் மாணவனுக்கு பல் உடைந்து வைத்திய சாலையில் அவமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

இன்று காலை பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின் போது ( மைக் ) ஒலிவாங்கி பழுதடைந்துவிட்டது. இதையடுத்து காலைப்பிரார்த்தனை ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மற்றைய ஒலிவாங்கியை எடுத்துவருமாறு ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரிடம் தெரிவித்துள்ளார் . இதையடுத்து அம்மாணவன் ஒலிவாங்கியை எடுத்துவர மறுப்புத் தெரிவித்துள்ளார் .

ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவர்கள் , 63 ஆசிரியர்கள் ஒன்றுகூடியிருந்த காலைப்பிரார்த்தனை இடத்தில் வைத்து அம் மாணவனின் கன்னத்தில் அறைந்துள்ளார் .

இதனைப்பார்வையிட்டுக்கொண்டிருந்த அதிபர் உட்பட ஆசிரியர்கள் எவரும் தடுக்கவில்லை .

பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிய மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவத்தை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கன்னத்தில் காயமடைந்த மாணவனின் பல் உடைந்துள்ளதாக தெரிவித்து அவரது உறவினரால் வைத்தியசாலையில் வை .ஏ.ஆசிப் வயது 12 என்ற மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.