புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

மலேசியாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு விவேகானந்தன்!! (Video)

அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரத்தில் அகதியாக பதிவு செய்து மலோசியாவில் தற்காலிகமாக வாழ்ந்துவந்த இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்த இருவரால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசியாவில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை விவேகானந்தன் (வயது 37) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மலேசிய வாழ் இலக்கைத் தமிழ் அகதிகள் அமைப்பு (STROM) அறிவித்துள்ளது.

கடந்த 03ஆம் திகதி அதிகாலை இருவரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பியிருந்ததாகவும் கடந்த 06ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் மலேசியாவில் ஜோகூர் மாசை எனும் இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் என்றும் தெரியவருகிறது. அகதி அந்தஸ்து கோரி அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்த்தானிகத்தில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அவர் தன்னுடைய பெயரை பதிவு செய்து காத்திருந்தவர் என்று மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image may contain: 3 people, people standingImage may contain: 3 people, people sitting and people standingImage may contain: one or more people, people standing, car and outdoorImage may contain: 1 person, text that says "கண்ணீர் அஞ்சலி மலர்வு 20.12.1983 உதிர்வு 06.09.2020 அமரர் கணபதிப்பிள்ளை விவேகானந்தன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...."Image may contain: car and outdoor, text that says "JMC 7669"Image may contain: 1 person