விஜகலாவின் காமுகர்களால் சமுர்த்தி ஊழியர்களாக சேர்க்கப்பட்ட 15 பேர் பணிநீக்கப்பட்டனர்!!

யாழ் மாவட்ட ஐ.தே.க அமைப்பாளரான விஜயகலா மற்றும் அவரது அடியாட்களாக காமுகர்களால் பெருமளவு பணமும் பாலியல் லஞ்சமும் பெற்ற பின்னர் சமுர்த்தி வங்கிகளில் கணணி தொடர்பான வேலைகளுக்கு நாட்சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட்டனர்.

வங்கிகளில் நிலவிய கணனித் தரவாளர்கள் வெற்றிடங்களிற்கு 15 பேர் நாள் சம்பள அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தனர். 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நியமிக்கப்பட்டபோதும் கடந்த ஆண்டு இறுதி வரையில் சம்பளம் வளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட சம்பளம் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் முழுமையாக நிறுத்தப்பட்டபோதும் தொடர்ந்தும் பணியாற்றியுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த விடயம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் வழக்குத் தாக்கலில் இருந்த குறையின் காரணமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வாறு வழக்கும் தள்ளுபடியான நிலையில் நேற்று முன்தினம் சமுர்த்தி அதிகார சபையானது இந்த பணியாளர்களை பணியில் வைத்திருப்பின் நீங்களே பொறுப்பாளிகள் என சமுர்த்தி வங்கிகளிற்கு கடிதம் அனுப்பியது . இதன் காரணமாக அத்தனை பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜயகலாவுடன் ஒட்டிக்கொண்டு திரியும் விஜிமருகன் மற்றும் ஊத்தைசேது என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன், வீரகேசரி ஆசிரியரான சிறிகஜன் ஆகியோராலும் பாலியல் லஞ்சம் மற்றும் பணம் என்பனவற்றை வழங்கியே குறித்த அப்பாவிகளுக்கு போலி நியமனம் கொடுக்கப்பட்டதாக அப்பாவிகளின் சார்பாக இயங்கும் சமூகவலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)