புதினங்களின் சங்கமம்

தமிழரசுக்கட்சி; தேசியப்பட்டியலுக்கு கலையரசன் தெரிவானார்!!

நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இது குறித்த அறிவிப்பினை மட்டக்களப்பில் வெளியிட்டுள்ளனர்.

சுமந்திரன், சிறீதரன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து திருகோணமலை வேட்பாளர் குகதாஸனை தெரிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் செயற்குழுவே முடிவு செய்யவேண்டும் என்று மாவை சேனாதிரசா பதிலளித்தாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில்,

நேற்று திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்ட சுமந்திரன், சிறீதரன் ஆகியோர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட்டவர்களுடன் இது குறித்து பேச்சு நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்ற தேசியப்பட்டியல் தொடர்பிலான கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு வழங்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கலையரசனை நியமிக்குமாறு சுமந்திரன், சிறீதரன் ஆகியோர் பரிந்துரைத்திருந்த நிலையில் இறுதியாக கலையரசன் தெரிவாகியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.