யாழ்ப்பாண ஜே.வி.பி வெங்காயங்கள் வீர வசனம் பேசாமல் செயலில் மட்டும் காட்டுவார்களா?
யாழ்ப்பாணத்தில் முன்னைய காலத்தில் அங்கஜன், டக்ளஸ் போன்ற நாட்டாமைகளால் முறைதவறி நியமிக்கப்பட்ட ஏராளமான அரச அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச நிர்வாக உயர் பீடத்தில் உள்ளவர்கள் காணப்படுகின்றார்கள். இவ்வாறானவர்களில் ஒருவரைக் கூட இன்னும் தற்போதய ஜே.வி.பி அரசு அகற்றவில்லை.
குறிப்பாக யாழ்ப்பாண அரச அதிபராக இருக்கும் பிரதீபன் அங்கஜனால் நியமிக்கப்பட் ஒருவர். அத்துடன் டக்ளஸ்தேவானந்தாவின் தீவிர ஆதரவாளர். பிரதீபன் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும் என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த அந்த ஆட்சியாளர்களுக்கு சார்பாக நடந்து தனக்குத் தேவையானவற்றைக் கறந்து விடுவார். அங்கஜனின் சித்தப்பா ராஜன் மற்றும் அவரது போதைப் பொருள்வியாபார மகன் போன்றவர்களுடனும் நெருக்கமாக செயற்பட்டவர் பிரதீபன். ராஜனின் மகன் வைக்கும் பார்ட்டிகளில் முக்கிய உறுப்பினராக கலந்து கொள்பவர்களில் பிரதீபனும் ஒருவர். பிரதீபன் 30 வருடங்களுக்கு முன் இயக்கம் இருந்த காலத்திலும் யாழ் இந்துக்கல்லுாரி மாணவனாக இருக்கும் போது இயக்கத்தின் மாணவர் அமைப்பில் மும்முரமாக செயற்பட்டவர். அவ்வாறு செயற்பட்ட போது திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை காதலித்துக் கொண்டிருந்தவர். அதனை அறிந்த அப்போதைய மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் அரவிந்தனால் இருவரும் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தனர். ஆனால் அந்த மாணவியை ஏமாற்றாது காதலித்த மாணவியையே கரம்பற்றிக் கொண்டார். இதே போல் அந்த மாணவியின் தங்கையை ருசாங்கன் எனும் ஈ.பி.டி.பியின் தீவிர செயற்பாட்டாளரும் காதலித்தே கலியாணம் கட்டினார். யாழ்ப்பாண அரச அதிபராக இருந்த தமிழரசுக்கட்சியின் தீவிர ஆதரவாளரான நாகலிங்கம் வேதநாயகனை அந்தப் பதவியிலிருந்து துரத்துவதற்கு பிரதீபனே முழுமூச்சாக செயற்பட்டு அங்கஜன், டக்ளஸ் போன்றவர்களுக்கு போட்டுக் கொடுத்தார் என அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் அந் நேரம் வந்திருந்தன. கோப்பாய் பிரதேசசெயலகத்தில் பிரதேசசெயலாளராக இருந்தது தொடங்கி பல்வேறுபட்ட மோசடிகளுடன் பிரதீபனுக்கு நேரடியாக தொடர்புகள் இருக்கின்றன என தகவலகள் வெளியாகியிருந்தும் தொடர்ந்து பிரதீபன் அரசஅதிபராக கடமையாற்றுகின்றார். ஜே.வி.பி ஆட்சிக்கு வரப்போகின்றது எனத் தெரிந்து பிரதீபன் பிளேற்றைத் திருப்பி இரகசியமாக ஜே.வி.பியுடன் கைகோர்த்துச் செயற்பட்டதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.
யாழ் மத்தியகல்லுாரி அதிபராக இருக்கும் இந்திரன் டக்ளஸ்தேவானந்தாவால் நியமிக்கப்பட்டவர். குறித்த பாடசாலைக்கு பெண் அதிபரை கல்வி அமைச்சு நியமித்த போது டக்ளஸ்தேவானந்தாவின் தலையீடு காரணமாக அந்த அதிபர் நியமனம் நிறுத்தப்பட்டு தற்போது இந்திரனே அதிபராக செயற்பட்டு வருகின்றார். யாழ் மத்தியகல்லுாரி பழைய மாணவனான ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இளங்குமரனிடம் தற்போது குறித்த அதிபரும் அவரது ஆதரவாளர்களும் சரணடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் அனுர வெற்றி பெற்ற பின்னரே இந்திரன் இளங்குமரனுடன் நெருக்கத்தைப் பேணத்தொடங்கினாராம். அத்துடன் தண்ணிப் பார்ட்டிகளும் அவருடன் சேர்ந்து நடந்துள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் இந்திரனே யாழ் மத்தியகல்லுாரிக்கு அதிபராக நீடிக்கப் போகின்றார் என்றால் டக்ளஸ்சின் நடவடிக்கைகளை ஜே.வி.பியும் ஆதரிக்கின்றதா?
யாழ் மாவட்ட ஜே.வி.பியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன். இவர் ஒரு பாடசாலை அதிபர். தமிழரசுக் கட்சியிலிருந்த சுமந்திரனுடன் நெருக்கமான உறவில் இருந்தவர். சுமந்திரனின் வழிகாட்டலிலேயே ஜே.வி.பிக்குள் நுழைந்ததாக தகவல்கள் வருகின்றன. இவர் ஒரு புகழ் விரும்பி. ரஜீவனை விட அவரது அப்பா இன்னும் பல மடங்கு புகழ் விரும்பி… சுடுகாட்டில் போய் யாருக்காவது அஞ்சலி செலுத்துவதாக இருந்தாலும் தனக்கும் மாலை வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். பேஸ்புக்கில் இவர்களது செயற்பாடு அட்டகாசமாக இருக்கும். குறித்த ரஜீவன் வேம்படி அதிபர் நியமனம் தொடர்பாக ஒரு கருத்தை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த கருத்து கீழே தரப்பட்டுள்ளது. ” வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்கு உடனடியாக அதிபர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனியும் அரசியல் நியமனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு வாலாட்டும் செயற்பாடுகள் நிறுத்தப்படும்.”
இதில் என்ன பகிடி என்றால் ஒரு அரசியல்வாதியாக உள்ள ரஜீவனும் ஒரு அரசியல்வாதி என்பதை மறந்துவிட்டார்.
ரஜீவன் அவர்களே….வேம்படிக்கு அதிபரை முதலில் நியமித்துவிட்டு உங்களது வீரப்பிரதாபங்களை பேஸ்புக்கில் பதிவிடுங்கள்… அதை விடுத்து வெங்காயத்தனமான பதிவுகளை இனிமேல் பதிவிடாதீர்கள்… அர்ச்சுனாவுடன் உங்களைப் போன்றவர்களையும் சேர்த்து கதைக்க தொடங்கவிடுவார்கள்…
இனியாவது பேஸ்புக்கிலிருந்து வெளியேறி சுய நினைவுடன் செயற்படுங்கள்…யாழ் போதனா வைத்தியசாலைக்கு பிரசவ விடுதி அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து அத்திவாரத்தையாவது போட்டுவிட்டு உங்கள் செயற்பாட்டை மக்கள் மத்தியில் காட்டுங்கள்… அதை விடுத்து குறைகளை உங்களுக்கு சொல்ல வந்தவர்களை வைத்துக் கொண்டு அதே குறையை பேஸ்புக் வாசகர்களுக்கு சொல்வதில் என்ன பயன் இருக்கின்றது……வாயால் வடை சுடாது நியத்தில் செயற்படுங்கள்…
யாழ் மாவட்ட ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களே… நீங்கள் ஒன்றை மீ்ண்டும் மீண்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… உங்களுக்காக மக்கள் வாக்குப் போடவில்லை… அனுர என்ற ஒருவர் ஊழல்களை இல்லாது செய்வார் எனக் கருதி தென்பகுதியில் எழுந்த அலையிலேயே நீங்களும் நீச்சலடிக்கின்றீர்கள்… யாழ் மாவட்டத்தில் ஜே.வி.பி தும்புக்கட்டைகளை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தால் கூட அவர்களுக்கு வாக்குப் போயிருக்கும்…ஆகவே இனி வரும் காலம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மட்டும் வெளிப்படுத்துங்கள்… செய்யப் போவதை கூறாதீர்கள்.. ஏனெனில் நீங்கள் செய்ய மாட்டீர்கள்…
வம்பன்…

