புதினங்களின் சங்கமம்

யாழ்.பரிசோதனைக்கூட முடிவுகள்; 14 பேருக்கு கொரோனா!

யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா பரிசோதனைக் கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் 14 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் வெளியிடுகின்ற கொரோனா தொடர்பிலான செய்திக் குறிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது,

இன்றைய பரிசோதனையில் தனிமைப்படுத்தல் மையம் விடத்தல் பளை மற்றும் பூவரசம் குளத்தைச் சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ……………………. இன்று 145பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் :

* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் -4 பேர்

* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 7 பேர்

* ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை-ஒருவர்

* பொது வைத்தியசாலை மன்னார் – 3பேர்

* தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை- 30 பேர்(13 பேருக்கு தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது )

* கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு-30 பேர்

* கிளிநொச்சி நாச்சிக்குடா எழுமாற்றுத்தெரிவு – 30பேர்

* இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் பூவரசங்குளம் -40 பேர்(ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது)

இதேவேளை சுகாதார அமைச்சு சற்று முன்னர் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2745 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.