வடக்கிழக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்கும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்! சிங்கள ஊடகம் தகவல்
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர், வடக்கு, கிழக்கு குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த பிரதி உயர்ஸ்தானிகர், கடந்த சில தினங்களாக தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு கிழக்கு தொடர்பான தகவல்களை சேகரித்து இந்திய மத்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்காக இந்த பேச்சுவார்த்தை நடத்துள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் கொழும்பு மற்றும் ஏனைய இடங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவது தூதரகம் கையாண்டு வரும் வழமையான பணிகளில் ஒன்று என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.