கிசு கிசு

திருகோணமலையில் 16 வயதான மாணவி கர்ப்பம்!! அக்காவின் கணவனின் லீலை!!

திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் தங்கையை ஐந்து மாத கர்ப்பிணியாக்கிய ஒரு பிள்ளையின் தந்தையை அடுத்த மே மாதம்2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று(20)உத்தரவிட்டார்.

துவரங்குளம், சூரங்கால் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது மனைவியின் 16 வயதுடைய தங்கையை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி ஐந்து மாத கர்ப்பிணியாக்கியதாக சிறுமியின் பெற்றோர்களினால் வான்எல பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கைது செய்து பொலிஸார்.

கந்தளாய் நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.