அடுத்த தமிழீழத்தேசியத்தலைவர் இவரா?? மாவை போட்ட அணுகுண்டு இது!!
விடுதலைப் போரை முன்னெடுக்கவே இளைஞர் அணியை உருவாக்கினோம்: மாவை ‘பகீர்’!
1. #இருந்துபாருங்க , மாவையைத் தூக்கி உள்ளுக்கு போடப்போறாங்க. 🙂
2. #இல்லைன்னா, மாவை ஒரு பட்டாசு பீசு என்று அவனுகளுக்கு தெரிந்து விட்டுடுவானுக.:)
3. #இல்ல மாவை விசாரணைக்கு அழைக்கப்பட்டு, புனர்வாழ்வுக்கு அனுப்பப்படவும் வாய்ப்பிருக்கு.:)
4.. #உங்களுக்கு வேறெதாச்சும் தோணுதா?? #ஏன்னா,
**வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில் பெருவிழாவில், விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களை நாதஸ்வரக் கச்சேரியின் போது இசைத்தார்கள் என்ற குற்றச்சாட்டில், தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
[இப்படி ஒரு செய்தி ]
#அப்படி இல்லாவிட்டால், இவனுக தமிழரசுக்கட்சிக்கு காரனுகளே, இந்த நாதஸ்வரவித்துவான்களைக் காட்டியும் கொடுத்திருக்கலாம்.
#அதற்கான காரணங்களின், அங்குமிங்கும் சரியாகத்தான் இருக்கு, காரணம்,
***பருத்தித்துறை, தமிழரசுக்கட்சித் தலைவராக எம்டன் சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளாராம்.
வவுனியாவில் தமிழரசுக் கொடியை தலைகீழாக ஏற்றிய பின்னர் மாவை சொன்ன கதை இங்கு தரப்பட்டுள்ளது.
விடுதலைப்போரில் பங்கேற்பதற்காகவே தமிழ் அரசுக்கட்சியின் இளைஞர் கட்டமைப்பு
உருவாக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சனை தீர்வு விவகாரத்தில், அரசாங்கத்திற்கு ஒரு காலஅவகாசம்
வழங்கி, கட்சியின் தேசிய மாநாட்டில் அறிவிப்போம். அந்த காலப்பகுதியில் அரசாங்கம்
இனப்பிரச்சனையை தீர்க்க தவறினால், ஜனநாயகரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.
இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் கட்சியின் இளைஞர் அணி தெரிவு நடந்ததன் பின்னர்,
செய்தியாளர்களுடன் பேசும்போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
எங்களது விடுதலைப் போரில் இளைஞர்களும் பங்கேற்க கூடியவர்களாக, ஜனநாயக நடைமுறைகளில்
இந்த இளைஞர்களை பங்குபற்றக்கூடியவர்களாக இளைஞர் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என
தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று தமிழரசுக்கட்சியின் இளைஞரணிக்கான நிர்வாகத் தெரிவு
இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்-
எதிர்வரும் 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு நாள் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம்
பெரும் அரங்கு ஒன்று யாழ் மத்திய கல்லூரியில் இரா.சம்பந்தனால் திறந்து வைக்கப்படவுள்ளது.
27 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் புதிய பொதுக்குழு இடம்பெறவுள்ளது. அந்த
பொதுக்குழுவில் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உட்பட 50
பொதுக்குழுவினரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதன்போது எத்தகைய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் ஆராயவுள்ளோம். 28 ஆம்
திகதி தமிழரசுக்கட்சி பேராளர் மாநாட்டில் அவை ஆராயப்பட்டு மாநாட்டு தீர்மானங்களாக
எடுக்கப்படும். அந்த தீர்மானங்களை ஒட்டி அன்று மாலை சங்கிலியன் பூங்காவில் இடம்பெறும்
பொதுக்கூட்டத்தில் அவை அறிவிக்கப்படும்.
இற்றைவரை இந்த இலங்கை அரசியலில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அரசியல்
அமைப்பு நெருக்கடிகள், அவற்றுக்கப்பால் தமிழர்களுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பது
மற்றும் தமிழர்களுடைய பிரதேசங்களிலே அதிலும் போரினால் பாதகிகப்பட்ட பிரதேசங்களில்
மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படாமல் உள்ளார்கள். இந்த அடிப்படையை கொண்டு 30:1 என்ற
மனித உரிமை பேரவை தீர்மானம் 2015 ஆம் ஆண்டும், அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டும் தற்போது
2019 ஆம் ஆண்டு 30:1 என்ற தீர்மானமும், 34:1 என்ற தீர்மானமும் 40:1 என்ற தீர்மானமும் மனித
உரிமை போரவையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அவற்றை இலங்கை அரசு தாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கின்றது. தீர்மானத்திற்கு அனுசரணை
வழங்கி விட்டு ஜனாதிபதியும் அரசாங்கமும் கூட தமக்கு அதில் வேறுபட்ட கருத்துக்கள்
உள்ளமையால் நிறைவேற்ற மாட்டோம் என ஒரு புறத்திலும் எங்களால் முடிந்ததை நிறைவேற்றுவோம்
என்றும் கூறி வருகின்றார்கள்.
ஆகவே எங்களுடைய மாநாட்டில் இனப்பிரச்சனை தீர்வு எட்டப்படாத நிலையிலும் மனித உரிமை
பேரவையில் எட்டப்பட்ட தீர்மானங்களையும் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதனை நாம்
வற்புறுத்த வேண்டியிருக்கும்.
இனப்பிரச்சனைக்கும் மனித உரிமை பேரவைக்கும் இந்த அரசு செவிசாய்த்து இந்த நாட்டில்
இனப்பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்கான அவகாசம் ஒன்று
விதிக்கப்படும். இதன் அடிப்படையில் வேண்டிய தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றுவோம்.
இந் நிலையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்த வேண்டுமானால் அத்தகைய தீர்மானங்களையும்
நாங்கள் எடுக்க வேண்டும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
*இளைஞரணியின் தலைவராக இருந்த சிவகரன் நீக்கப்பட்டு நீண்ட காலத்தின் பின்னர் இளைஞரணி
நிர்வாகத் தெரிவை நடத்தியதன் நோக்கமென்ன என ஊடகவியலாளர் கேட்டபோது,*
அதற்கான காரணம் சிவகரன் தானாகவே எமது அணியில் இருந்து விலகிச்சென்று விட்டார்.
தமிழரசுக்கட்சியின் மாநாடு இது முதல் தடவையல்ல. இதற்கு முன்பும் 4, 5 ஆண்டுகளுக்கு
முன்னரும் நடைபெற்று வந்திருக்கின்றது. நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக வவுனியாவில்
2015 இல் இடம்பெற்ற மாநாட்டிற்கு பின்னர் தற்போது நடைபெறுகின்றபோது, இளைஞர்கள் அணியை
மீள் கட்டியெழுப்ப இன்று பெருமளவில் இளைஞர்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அணி
திரட்டப்பட்டுள்ளார்கள். அந்த கடமை தற்போது நிறைவுக்கு வந்ததால் அவர்களையும் எங்களது
விடுதலைப்போரில் அவர்களும் பங்கேற்க கூடியவர்களாக ஜனநாயக நடைமுறைகளில் இந்த இளைஞர்களை
பங்குபற்றக்கூடியவர்களாக இந்த இளைஞர் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
*தமிழரசுக்கட்சியின் மாநாடு இடம்பெறவுள்ள நிலையில் அதன் தலைமைத்துவத்திற்காக
விட்டுக்கொடுப்புகளை செய்ய நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா என கேட்டபோது,*
ஆம். அது தொடர்பில் நிர்வாகத்தினர் தலைவர் பொறுப்புக்கு பிரேரணைகளை
கோரியிருக்கின்றார்கள். அதன்போது கிடைக்கின்ற பிரேரனைகளை பொதுக்குழு கூடுகின்றபோது
ஆராயந்து பேராளர் மாநாட்டில் அந்த தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும்.
*20 ஆம் திகதி கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் சந்திப்பை மேற்கொள்வதாக
தெரிவித்திருந்தீர்கள். அது சாத்தியமாகியிருக்கின்றதா என ஊடகவியலாளர்கள் கேட்டபோது,*
25 ஆம் திகதி இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர இருக்கின்ற சந்தர்ப்பத்தில் நாங்கள்
யாழ்ப்பாணத்திலோ வவுனியாவிலோ அவ்வாறான நிகழ்ச்சிக்கு அவர்களுக்கு அறிவித்திருக்கின்றோம்.
அவர்களுடன் பேசுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம். அது பேசப்பட வேண்டும். எமது எதிர்கால
நிகழ்சிகள் தொடர்பாகவும் பேசுவோம். மாநாட்டிற்கும் அழைத்திருக்கின்றோம்.
ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களும் ஒத்துழைப்பு தருவார்கள் என
நம்புகின்றோம். அந்த பேச்சுவார்த்தையில் சிறந்த ஒரு தீர்மானத்தினை நாம் எடுப்போம். அந்த
சந்திப்பு இடம்பெறும்.
அனைத்து தமிழ் கட்சிகளுடனும் ஒன்றிணைய வேண்டும் என்கிறீர்கள். உங்கள் கட்சி வடக்கிற்கு
அறிமுகம் செய்த முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்போது புதிய கட்சியை
உருவாக்கியுள்ளார். அவருடன் பலர் உள்ளனர். இந் நிலையில் தமிழர்களது பிரச்சனைக்கு தீர்வு
காணும் நோக்கத்திற்காக அவர்களுடனும் ஒன்றிணைந்து பயணிப்பீர்களா என கேட்டபோது,
எமக்கு ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற அனைவருடனும் மாநாட்டு தீர்மானமாக அழைப்பு
விடுத்து எங்களுடைய தீர்மானங்களின் அடிப்படையிலும் அவர்களுடன் பேசுகின்ற அடிப்படையில்
ஆராய்ந்தும் அடுத்த கட்ட நகர்வுக்கு போவதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். அதன்
முன்னாயத்தமாக இணக்கமான அடிப்படைகள் ஏற்படுவதற்காக அவர்களுடன் பேசுவதற்கும் ஆயத்தமாக
இருக்கின்றோம்.