ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (21.04.2019)

மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். பிற்பகல் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்துசெயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

கடகம்: பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த் திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.

துலாம்: நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட் களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தி னரிடம் கோபத்தை காட்டாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உடல் நலத் தில் கவனம் தேவை. வியாபாரத் தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். பிற்பகல் 1.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்ச ரிக்கை தேவைப்படும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரி யவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

மகரம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மீனம்: பிற்பகல் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாம லேயே ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதைஉணர்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.