யாழ் பல்கலை மாணவன் குடித்த குளிர்பாணத்தினுள் கிடந்த அசிங்கம்(Photos)
தாகம் தீர்க்க கடையொன்றில் உள்ளூர் மென்பானம் வாங்கிய பல்கலைக்கழக மாணவருக்கு அதிர்ச்சி ஏற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (22)மதியம் உணவருந்திய பின் குறித்த மாணவன் யாழ்ப்பாணம் புறநகர் கடை ஒன்றில் குளிர் மென்பானத்தை கொள்வனவு செய்துள்ளார்.
அத்துடன் அம்மென்பானத்தை குடிப்பதற்கு முற்பட்ட வேளை சுவை மாறுபட்டிருந்ததை உணர்ந்துள்ளார்.
இதனால் மென்பானத்தின் மேல் உறையை அவ்விடத்தில் இருந்து அகற்றிய வேளை
உள்ளே சளி போன்ற திரவத்துடன் தலைமுடியை ஒத்த பொருள் காணப்பட்டுள்ளது.
எனினும் இவ்விடயத்தை கடை உரிமையாளரிடம் குறிப்பிட்டும் கூட எந்தவொரு திருப்தியான பதிலை தரவில்லை என குற்றஞ்சாட்டினார்.