விசுவமடு சிவில் படை அதிகாரியின் வித்தியாசமான ஆசை இதோ!!
வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே
இருக்கின்றேன் என்று முல்லைத்தீவு, விசுவமடு சிவில் பாதுகாப்பு படைப்
பிரிவுக்கு முன்னர் பொறுப்பாக இருந்த லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து
நேற்றுத் தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சி சேவையான தெரணவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த
அறிவிப்பை விடுத்தார்.
வசுவமடு சிவில் பாதுகாப்பு படைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த ரத்னபிரிய
பந்துவுக்கு 2018ஆம் ஆண்டு ஜனவரியில் இடமாற்றம் வழங்கப்பட்டது. இதற்கு
முல்லைத்தீவு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், தாம் அவரை
கடவுளாகவே கருதுவதாகவும் குறிப்பிட்டனர்.
இடமாற்றம் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் கண்ணீருடன் அவருக்கு
விடைகொடுத்தனர்.
இந்நிலையில் அதிருப்தி காரணமாக பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே
இராணுவ சேவையிலிருந்து ரத்னபிரிய பந்து ஓய்வுபெற்றுள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியலில், வடக்கு அரசியல் களத்தில்
குதிப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.
இவை எல்லாம் திருவிளையாடல்கள் என மக்களுக்கு எப்போ தெரியப் போகின்றது.??