வீதியில் வைத்து மக்களை கொல்ல துடிக்கும் புளொட் ஒட்டுக்குழு. (Photos)
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான கார்பெற் வீதிகள் மற்றும் சிறு வீதிகள் எல்லாவற்றிலும் ஒட்டுக் குழுவைச் சேர்ந்த சித்தார்த்தன் மற்றும் கஜதீபன் ஆகியோரால் பெயிண்ட் கொண்டுவரையப்படும் பாரிய தேர்தல் சின்னங்களால் நாளுக்கு நாள் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் உரும்பிராய் சுன்னாகம் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள் விரோத செயற்பாடு தற்பொழுது உடுவில் சண்டிலிப்பாய் போன்ற இடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது இதனால் வீதியில் போக்குவரத்து செய்யும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் ஏற்கனவே உரும்பிராய் பகுதியில் இந்த ஒட்டு குழுக்களால் வரையப்பட்ட சின்னங்களால் விபத்துகள் ஏற்பட கூடிய சாத்தியக்கூறு உள்ளது என நாம் எமது செய்திச் சேவை தெரிவித்திருந்தோம் அதேபோல சில நாட்களுக்கு முன்னால் உரும்பிராய் சந்தியில் இந்த பாரிய சின்னத்தினாலும் அதை அழிப்பதற்கு பொலிசார் கறுப்பு நிற ஒயில் ஊற்றியமையாலும் மோட்டார் சைக்கிள் ஒன்று நிலைதடுமாறி டிப்பருடன் மோதி பாரிய அனர்த்தம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தெய்வாதீனமாக சாரதி தூக்கி வீசப்பட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் இந்த ஒட்டுக் குழுக்களின் விருப்பு வாக்குகளுடன் தற்போது புதிய இடங்களில் மாவை சேனாதிராசாவினது விருப்பு இலக்கமும் சேர்த்து வரையப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த மக்கள் விரோத செயலை மேற்கொள்ளும் இவர்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கும்பலாக பெயிண்ட் வாளிகளுடன் வந்து வரையும்போது சுற்றுக்காவலில் ஈடுபடும் பொலிசாரும் இராணுவத்தினரும் எவ்வாறு கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர் அல்லது அவர்களின் துணையுடன்தான் மக்கள் சந்தேகம் தெரிவிப்பதுடன் இவ்வாறான மக்களை அசௌகரியப்படுத்தும் இவர்களுக்கு இம்முறை தாம் வாக்களிக்கப் போவதில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.




